Monday 20 January 2014

kaathal vidumurai...

காலத்தின் விதியால்
காதல் விடுமுறை நாட்கள்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு யுகமாக கரைகிறது
நிலவே உன்னை பார்க்காததால்
நிமிடங்கள் சென்று விடகூடாதா
காலங்கள் கரைந்து விடகூடாதா
நாம் மீண்டும் சந்தித்து விடகூடாதா
அக்கணம் உறைந்து விடகூடாதா
இப்படி என் மனம் குழம்பி தவிக்கிறது
நிமிடங்கள் செல்ல
கடிகார முள்ளை திருப்பினேன்
நிமிடமும் செல்லவில்லை
நாட்களை கழிக்க
நாளிகையை கிழித்தேன்
நாட்களும் நகரவில்லை
குளிர்காலமும் கோடை ஆனதே
கணமும் ரணமாய் மாறுதே
மெழுகாய் மனமும் உருகுதே
மெல்ல உயிரும் சாகுதே
பெண்ணே.....!
உன்னை பார்த்திடும் நாட்கள் காலம்
நதியாய் போல்
ஓடுவது ஏன்..............!
உன்னை பார்க்காத நிமிடம் காலம்
நத்தை போல் நகர்வதேன்....

posted from Bloggeroid

Monday 6 January 2014

விலைமாது விடுத்த கோரிக்கை..!
ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
நான் இருட்டில் பிணமாக
மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..
ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
இறுதியாக
இரு கோரிக்கை.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.

posted from Bloggeroid

maathaviyin kannneer...

விலைமாது விடுத்த கோரிக்கை..!
ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
நான் இருட்டில் பிணமாக
மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..
ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
இறுதியாக
இரு கோரிக்கை.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.

posted from Bloggeroid

antha oru nimidam...

ஆயிரம் ஆயிரம் அலைபேசி
குறும் குறுஞ்செய்திகள்
அனுப்பியும் உன்னிடத்திலிருந்து
பதில் இல்லவே இல்லை...
நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்கள் மணிகளானது...
மணிகளும் நேரங்களாகி
முப்பொழுதுகளை தின்றது...
உன்னிடத்தில் இருந்து
பதில் வராமல் போனதால்
பதட்டம் அதிகமாகி பின்
கலக்கம் குடிகொண்டது...
எப்படியும் தகவல் வரும்
என காத்துக் கிடந்த
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகி
கோபங்கள் ஆத்திரமாயின...
அச்சம் விடை பெற்றப் பின்
உச்சம் அடைந்த ஏமாற்றம்
மிச்சம் சொச்சம் இருந்த உயிரை
துச்சமாய் மிதித்து துடித்தது...
அந்நேரம் அலைபேசியின் ஓசை
குறுஞ்செய்தியின் இசையாய்
ஒலித்து ஒளிர்ந்து எந்தன்
கவணத்தை திசைதிருப்பியது...
” போடா லூசு“ என்ற உன் ஒருவரி
கவிதை வந்து அத்தனையையும்
கல்நெய் காற்றில் கரைந்ததுபோல்
மறையச் செய்த மாயம்தான் என்ன?
என்னமோ போடி....
Z
(கல்நெய் - பெட்ரோல்)

Friday 3 January 2014

எம் தாய் திரு நாட்டில் ....

வெக்கை
வெயிலில்,
ஆழமாய் அடிவயிறு
பசியில் தாளமாய்.,
பிஞ்சு குழந்தை
உண்ணும் உணவிற்க்கு,
மொட்டை வெயிலில்
சலங்கை கட்டி ஆடிய
கோலமாய் .,
ஒருவேளை கூட பசியாறாத,
பிச்சைக்கார குழந்தை
வயிறு பாலமாய் .,
இருப்பிடம் இன்றி
உழைப்பிடம் தேடி,
ஓடி சென்ற பாமரக்குழந்தை தண்ணீர்
இன்றி
தாகமாய் .,
பேருந்து சன்னல் ஓரம்
பெயர் இல்லா
கடவுள் குழந்தையின்
வாழ்க்கை சோகமாய்
போனதே..,
யாம் பிறந்த
பாரதத்தில் ... !

Published with Blogger-droid v2.0.10

Wednesday 1 January 2014

முதியோர் இல்லம்

நேற்றைய உலகின்
குதிரைகள்,
காலச்சுழற்சியில்
முதுமை ஒட்டுக்குள்
பதுங்கும்
நத்தைகளாய்ப் போயின...!
உறவுகள் உதற
வெளியே விழுந்த இவர்கள்
பெற்றோர்கள்...!
உள்ளத்தில் ஊனமுடைய
குழந்தைகளைப் பெற்றவர்கள்...!
கவி வரிகளுக்குள்
கட்டுப்படாத
மனவலிகளை
சுமந்து நிற்கும் இவர்கள்
இனிஷியல் கொடுத்தவர்கள்
இதயமில்லா இளசுகளுக்கு...!
அடைகாத்த குஞ்சுகளே...
கொத்தி விரட்டியதால்
அடைக்கலம் தேடும்
இவர்கள்,
புறக்கணிக்கப்பட்ட ஏணிகள்...!
துடுப்புத் தொலைந்த
தோணிகள்...!
==========