Tuesday 1 May 2012

இதழ் திறவாயோ....

என் இனிய  நண்பர்கள் அனைவருக்கும் பிரியனின் பிரியமான வணக்கங்கள்....சிறு இடைவெளிக்கு பின் உங்கள் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி....இன்று நான் என் காதலிக்கு தந்த முதல் இரு கடிதங்களை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.....உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி 
பிரியமுடன் பிரியன் 
என்னை முழுதாய் கொள்ளையடித்த
வினாடிகள் எதுவாய் இருக்குமென கடிகாரத்தை பார்த்து கேட்கிறேன் .....
உன்னை பார்த்தவுடன் வியர்வை சுரப்பிகளுக்கேல்லாம் ஏனோ 
வெட்கம் போயி விடுகிறது....
என்னுளே இவ்வளவு வெட்கமா என
நானே ஆச்சர்யம் கொள்ள வைக்கிறாய்....
என்னுயிர் எங்கே இருக்கிறது
என பல நாட்கள் தேடி இருக்கிறேன்...
அதை கண்டு பிடித்து தந்தவள் நீ.......
உன்னை பார்த்த பிறகு எனக்கு மிக மிக பிடித்தவை எல்லாம் 
இரண்டாம் இடத்தில்.... 
மனதில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவது கேள்வி பட்டிருக்கிறேன்....
அதை நிஜத்தில் காட்டினாய் நீ.....
சிந்தித்து சிந்தித்து உன்னை செலவளித்தாலும் விஸ்வரூபம் எடுத்து 
கொண்டே இருக்கிறாய் என் நெஞ்சில்....
கண்ணாடிக்கு முன்னே இரு நிமிடங்கள் 
அதிகமாய் நிற்க வைக்கிறாய் நீ....
நீ அருகில் இருந்தால் யுகன்களோ நிமிடங்களாக....
நீ பிரிந்தால் நிமிடங்களோ யுகங்களாக....
நீ வருவதற்கு முன்னும் வந்த பின்னும் நான் அதிகம் பேசுவதென்னவோ 
என் கடிகாரத்திடம் தான்...ஆயினும் ஏனோ என் மன ஓட்டதி 
புரிந்து கொள்வதே இல்லை...
தன ஓட்டத்திலேயே போகிறது....
எல்லோரும் சிரித்தால் நானும் சிரிக்கிறேன்...
எல்லோரும் மௌனமானாள் 
நானும் மௌனமானாள் 
நானும் மௌனமாகிறேன்...
என்னிடத்தில் நான் இல்லாத வினாடிகள் அவை வேறென்ன செய்ய....?
எல்லாவற்றையும் ரசிக்க வைக்கிறாய்....
நான் உண்ணும் உணவை தவிர...
தலைகீழாய் புத்தகம் வைத்து கொண்டு படித்து 
முடிக்கிற திறமையை தந்தவள் நீ....
t .v  பார்த்து கொண்டிருக்கிறேன்...என்னாவ்டுகிறது என்பது புரியாமல் 
உன் நினைவில் நான் இருந்து கொண்டு....
உன்னை யோசித்து கொண்டே இல்லாத நகத்தை கடிக்கிறேன்...
தானாய் சிக்கும பொது மற்றவர் நெற்றியை சுரிக்கினால் என் உதடை மடித்து சமாளிக்கிறேன்...
பல சமயம் நான் யாரென்று கில்லி பார்த்து பின் தான் உணர வேண்டி உள்ளது...
கண்மூடி யோசித்து யோசித்து 
உன் முகம் கொண்டு வர பார்கிறேன்....
நெஞ்சதிளிருக்கும் உன் முகம்
கண்ணிற்குள் வர மறுக்கிறது...
என் தனிமையை சேகரித்து வாய்த்த உன் நினைவுகளை கொண்டே இனிமையாக்குகிறாய்,,,,
உன்னை எப்படி கூப்பிடுவது எனயோசிது யோசித்து 
யோசித்து கொண்டே என் பெயரை மறக்கடிக்கிறாய்...
உன்னை பார்த்திருக்கும் நொடிகளில் நெஞ்சில் பூ பூக்க வைக்கிறாய்....
பட்டாம் பூசிகளை பறக்க விடுகிறாய் என் நெஞ்சில் ....
நீ பேசும் பொது என் 
தாய் மொழியை மறக்க வைக்கிறாய்....
தமிழில் இல்லாதம் வார்த்தைகளை தேடி
ஓட வைக்கிறாய்....
தூக்கத்தில் உன்னை உளறி விடுவேனோ என இப்போதெல்லாம் நான் 
உறங்குவதே இல்லை...
யாராவது உன் பெயரை உச்சரித்தாலே 
என் இடத்தைய துடிப்பு இரு மடங்காகிறது...
உன்னை மறக்க வலி என்ன 24 மணி நேரமும் 
யோசிக்கிறேன்....
அந்த 24 மணி நேரமும் உன்னையே நினைக்கிறேன் 
என்பதை மறந்து விட்டு...
என் பேனா முனைகூட உன் பெயருக்கு வலிக்க கூடாதென 
காற்றில் தான் உன்பெயரை எழுதி பார்கிறேன்....
நீ சின்ன சின்ன குறிப்பால் உன் மனதை உணர்த்திய வினாடிகள் தாம் 
எனக்கு பெரிய பெரிய பாதிப்பை தந்திருக்கிறது...
யுகங்கள் பல கழிந்து பாதிக்க பட்ட எனக்கே இப்படியெனில் 
பாதிப்பை ஏற்படுத்திய உனக்கு....
ஆனாலும் பாவம் நீ
நான் கேட்டேனா இவற்றையெல்லாம் உன்னிடம்....
இப்படி அவஸ்தைகளை தருவாய் என்றும் எனை உயிரோடு கொள்வாய் என்றும் தெரிந்திருந்தால் 
உன்னுடனான சந்திப்புகளை தவிர்த்திருப்பேன்....யோசிக்கிறேன்
தவிர்க்க முடியுமாவென்று என்னுள்ளே
ஒரு கேள்வி கேட்டால் நிச்சயம் 
முடியாதென்று சத்தியம் செய்கிறது   
உள்ளே இருக்கும் என் மனம் ...
இறுதியாய் ஒரு உண்மையை சொல்கிறேன் 
இந்த அவஸ்தைகளும் எனக்கு பிடித்து தான் இருக்கிறது...
ஓர் உயருக்குள் இன்னோர்
உயிரை அடைத்து வைத்திருக்கும் சுகமான அவஸ்தை...
இந்த அவச்தைஎல்லாம் உனக்கும என நான் இதயத்தால் கேட்டால் நீ கண்களால் ஆம் என்கிறாய்...
உன் மௌனம் எனக்கு மிக பிடிக்கும் என்பதால் உன் மௌனத்தாலேயே எனை கொல்லாதே....
இதை திறந்து பதில் சொல்....
காத்திருக்கிறேன் அந்த மூன்று வார்த்தைக்காக.....
பிரியமுடன் பிரியன் ...

No comments: