Sunday, 26 February 2012

புரிந்து கொள் என் அன்பே!

அன்பே!
நான் உன்னை
காதலிப்பது நிஜம்
அதை உன்னிடம்
வெளிப்படுத்தாததும் நிஜம்
அதற்கு காரணம்
பயம் என்பதில்லை
என் குடும்பம்
என் மேல் வைத்துள்ள
அசைக்க முடியா நம்பிக்கை
அதனால் தான்
நானே என் உதடுகளை
சிறையிட்டு வைத்துள்ளளேன்
அது கூட
சாதாரண சிறையல்ல
இரும்பாலான சிறை
அதை உன்னால்
உடைக்கவும் முடியாது
என்னால் உடைத்து
வெளியேறவும் முடியாது
புரிந்து கொள் என் அன்பே!

என்னை நானாக இருக்க விடு.


நான் நீயல்ல - ஆனால்
நான் நானாக இருப்பதற்கு - நீ
ஒரு சந்தர்ப்பம் தருகிறாய் இல்லை
நீ
என் விசயங்களில் தலையிடுகிறாய்
ஏதோ அவை
உன் விசயங்கள் போலவும்
நீ நான் போலவும்

“நான் நீயாக இருந்தால்........”
உனக்கு தெரியும்
நான் நீயல்ல என்றாலும்
நீ - என்னை நானாக இருக்க
விடுகிறாய் இல்லை

நான் நீயாகலாம்
உன்னை போல் பேசலாம்
நடக்கலாம், சிரிக்கலாம்
என எண்ணும்
உனக்கு புத்தியில்லை
உன் பக்கம் நியாயமில்லை

கடவுள் என்னை நானாகவும்
உன்னை நீயாகவும் படைத்தார்
கடவுள் பேரால் கேட்கிறேன்
என்னை நானாக இருக்க விடு.

Saturday, 25 February 2012

உதாசீனப்படுத்தப்பட்ட அன்பு...


உன்னால்
உதாசீனப்படுத்தப்பட்ட
எம் அன்புக்கு இன்று
மாதம் ஒன்று பூர்த்தி ஆகிறது
உன்னால் கொல்லப்பட்ட
எம் உணர்வுகளும்
உன்னால் எம் மனம் என்னும்
கல்லறையில் உயிரோடு புதைக்கப்பட்ட
எம் இதயமும் அதனுள் அடைக்கப்பட்ட
எம் உன் நினைவுகளும்…..
உயிரற்று வாழும் எம்
உடலுக்கு வாழ்த்து சொல்லி செல்கின்றன…….
எமக்காக எம் கண்கள்
ஒரு துளி கண்ணீர் சிந்தத் துடித்தாலும்
அந்த ஒரு துளியினால்
உனக்கேதும் ஆகிடுமோ என்ற பயத்தில்
எம் கன்னத்தோடு நிறுத்தி விட்டோம்
உன்னால் சிதைக்கப்பட்ட கனவுகளுடன் நாம்…….


வெற்றிடம்...


என் கனவுகளின் தேவதையே!..
உன்னால் ஏற்ப்பட்ட வெற்றிடம்
ஒரு கோடி பேரின் ஒட்டுமொத்த
அன்பால் கூட நிரப்ப முடியாதடி!...

தாய்மை...

கண்ணே!..
நம் அன்பின்
அடையாளத்தை ஈன்றெடுக்க 
பத்து மாதம் - நீ
பட்ட அவஸ்தைகளை
பக்கத்திலிருந்து
பார்க்க மட்டும்தானே
முடிந்தது - உன்
கஷ்டங்களில் பங்கெடுக்கும்
பாக்கியமில்லாமல் போனதேனடி!

என்னை கரைசேர்ப்பாயா...?

என் எண்ணங்களில் நீந்தி
என்னுயிரை எடுத்து சென்றவளே!
என் நரம்புகளில் நடனமாடி
என்னின் ஒவ்வொரு நாழிகையிலும்
என்னையே தின்றவளே!
என்னின் இரத்தநாளங்களின் ஊற்றாக
என்றும் இருந்தவளே! - இதோ
இன்று நீயில்லாமல்
என்னுடல் ஜீவனில்லாமல் வாழ்கிறதடி!
எல்லோருக்கும் பிரியமானவளே
என்னை கரைசேர்ப்பாயா - இல்லை
கல்லறையில் தான் காண்பாயா?

உன்னை நான் மறக்க இயலும்?

உன்னை நீ மறக்க சொன்னாய் என்பதற்காக
உன்னை மறக்க நினைத்து; யதார்த்த
வாழ்வில் கால் பதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் - நீ
குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பாக
பள்ளிமாணவியின் பயமில்லா செயலில்
கல்லூரிமாணவியின் செல்ல சில்மிசங்களில்
இளமங்கைகளின் வெட்க நாணத்தில்
தாயின் பாசத்தில் பரிதவிப்பில்
தந்தையின் அன்பில் அக்கரையில்
ஆசானின் கண்டிப்பிலும் வழிகாட்டுதலிலும்
இப்படி என் எதிர்படும் எல்லோரின்
ஏதோ ஒரு செயலில் உன்னை
எனக்கு ஞாபகப்படுத்துகிறாயேடி - பிறகு
எப்படியடி உன்னை நான் மறக்க இயலும்?

பிரியமுடன் வாழ வைப்போம்...

சாதி எனும் சம்பிரதாய சடங்குகளில் - என்
பிரியமானவளின் பிரிய காதலை
சமாதியாக்கிய என் அவல சமுதாயமே!...
பிரியமானவளின் கரங்களுக்குள்
பிரியமுடன் ஒருநொடி வாழ்ந்ததுண்டா?
பிரியமானவளின் மூச்சு காற்றை
பிரியத்துடன் சுவாசித்ததுண்டா?
பிரியமானவளின் நெருக்கத்தின் சூடு
பிரியத்துடன் அனுபவித்ததுண்டா?
பிரியமானவளின் நினைப்பே மகிழ்ச்சியடைய வைக்குமே
பிரியத்துடன் மனதில் அதை உணர்ந்ததுண்டா?
பிரியம் பிரியமானவளிடம் மட்டுமே வரும் - இதோ என்
பிரியமானவளிடம் நான் பிரியமுடன்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!..
வரும் தலைமுறையாவது தழைத்திட
சாதி மதமற்ற சமத்துவ காதலை
பிரியமுடன் வாழ வைப்போம்

ஒதுக்கி தள்ளியதேனடி?

மின்னலை போல
ஒற்றை ஒளிக்கீற்றாய்
உன் ஒரு புன்னகையில்
என் ஒட்டுமொத்த வாழ்வை
மொத்தமாக புரட்டி போட்டவளே!
ஒத்தை வார்த்தை சொல்லி - என்னை
ஒதுக்கி தள்ளியதேனடி?

காலத்தால் மாற்றமுடியாததடி!...

உன்னோடு வாழ்தல்
இயலாத போதும்
உன்னோடு கனவுகளில்
களம் அமைத்து
உரையாடுவதும் உறவாடுவதும் 
காலத்தால் மாற்றமுடியாததடி!...

என் ஆயுளை ஒப்படைத்தேனடி...

அதிராமல் வெளிப்படும் உன்
அன்பு வார்த்தைகளும்
கனிவான உன்
கருணை பார்வையும்
ஆப்பிள் கன்னமும்
அழகாய் அமைந்த
குடைமிளகாய் மூக்கும்
குண்டு கண்களும்
சின்ன உதடுகளில்
மெல்ல வழிந்தோடும்
உன் சிரிப்பும் - என்
சிந்தனைகளை சிதறடிக்கவில்லை!..
மாறாக
ஆயிரமாயிரம் கொளுசுகளில் - உன்
ஒத்தை கொளுசொலி - என்
உயிர் வாங்கி...
இதயத்தின்
அடி தொட்ட நாளில்...
அடியேன் உன்னிடம் - என்
ஆயுளை ஒப்படைத்தேனடி

தயக்கமின்றி தலைவணங்கும்...


அந்தி சாயும் நேரம்
அழகிய நிலவொளி
அமைதியான மொட்டைமாடி
அன்பு செய்யும் உள்ளங்கள்
அழகோ கொள்ளை அழகு!

உணர்வுகளின் துண்டுதலால்
காதலித்த உன்னை
உணர்ச்சிகளின் தூண்டுதலால்
அத்துமீற விரும்பவில்லை
அது தான் தமிழ் பண்பாடு!

நாகரீகம் மாறலாம்
நடையுடையும் மாறிடலாம்
நம் தொன்று தொட்ட
பண்பான பண்பாட்டை
புண்ணாக்கிட முடிந்திடுமா?

காதலில் ஜெயிப்பதெல்லாம்
காலம் காலமாய் இருக்கிறது
கண்ணியத்தில் ஜெயித்துவிடு
காதல் மட்டுமல்ல
சுற்றமும் உன்னை
தயக்கமின்றி தலைவணங்கும்

அடி நெஞ்சின் ஆழத்தில்.....

ஆசைகளை சுமந்த இதயம்
அழகான கற்பனைகளை
ஆருயிரில் கலந்த படி
ஆர்ப்பரித்து நிற்கையில்
அவஸ்தைகள் பல தாங்கிய
ஆயிரம் கலக்கங்கள்
அடி நெஞ்சின் ஆழத்தில்.....
ஆனால்
அப்பப்ப எட்டி பார்க்கும்
அன்புகளின் ஆறுதலுடன்
ஆசைகளின் கற்பனைகள்
அழகான வாழ்க்கையாய்
அமையுமென்ற ஆறுதலில்...!

வழி பார்த்து காத்துள்ளேன்!

கலைந்த கனவுகளையும்
கண்ணீரின் நினைவுகளையும்
மனதிலே தேக்கி
மானசீக உறவே உன்
மகிழ்வான வருகைக்காய்
வழி மேலே விழி வைத்து
வழி பார்த்து காத்துள்ளேன்!

Monday, 20 February 2012

என் கண்ணீர் துடைக்க..


கவ்விய இருளில்
என் வாகன விளக்கொளி..
உன்னை நோக்கி வந்து
கொண்டு இருக்கிறேன்..

அழைப்புக்கு நன்றி
உன் மண நாள் கொண்டாட
நானும் வருகிறேன் -மறக்க
இயலாத நினைவுகளோடு .

காதலின் ஈரம்
வாடாமல் உன் திருமண
அழைப்பில் வழிகிறது -
என் கண்களில் இருந்து

மாலை கடற்கரையில்
மடிமீது தலை சாய்த்து
முடிகோதிய உன் விரல்கள்..

பார்வைகளையே பரிசாக்கும்
உன் கண்கள்.
என்னை தழுவி சலித்த
உன் கைகள் .
நடனமாய் நடக்கும்
உன் கால்கள் .
என்னை பூட்டி வைத்ததாய்
சொன்ன இதயம்..
சாவி தொலைத்தாயா?
இதயம் தொலைத்தாயா ?

சந்திப்போம் மணமேடையில்
அன்பே..
உன்கைகளை கட்டிவிடு..
மடிமீது தலை சாய்த்து
முடிகோதிய உன் விரல்கள்..
நீண்டுவிடும்
என் கண்ணீர் துடைக்க..

Saturday, 11 February 2012

ஒன்றுதான் வித்தியாசம்.


நீண்டு கடந்த
நாட்களின் பின்
தூரத்திலாவது
உன்னை
கண்டபோதுதான்
கனவுகள் மரித்தாலும்
என் - கண்கள்
இன்னும்
உயிர்வாழ்வதை உணர்ந்தேன்.
இமைக்காமல்
பார்த்திருக்கலாம்.
கண்ணுள் வந்த உன்னை
இமைத்து
உடனே
அழித்துவிட
இஷ்டம் இல்லை எனக்கு.
உறக்கத்திலிருந்த
என்
உணர்வுகளின்
பற்றைகளுக்குள்
தீமூட்டிப் போனது
உன்
திடீர் தரிசனம்.
இதயத்தை
காலி செய்தாய்
நேற்று.
பின்னர்,
என்
கண்களுக்குள்
ஏன்
வலி தந்தாய்
இன்று?
உறக்கத்திற்கும்
உன்னை
பிடித்திருக்கவேண்டும்,
உன் நினைவால்
உறங்காமல்
கிடக்கிறது,
என்
உறக்கம்
கண்களில்.
காதலியாய்
பார்த்துப் பழகிய
கண்கள்,
கண்டவுடம்
கண்டபடி கூசின.
முதல் முறை
உன்னை
யாரோ ஒருவராய் பார்க்க.
உனக்கும்
எனக்கும்
ஒன்றுதான்
வித்தியாசம்.
நீ
என்னை மறந்து தூங்குகிறாய்.
நான்
உன்னை மறக்க தூங்குகிறேன்.

காதலியாய் நீ இருக்க வரம் கொடுப்பாயா?


உடலாக நானிருக்கின்றேன் - நீ
உயிராய் இருக்க வரம் கொடு ....!
உள்ளமாக நானிருக்கின்றேன் - நீ
உணர்வாய் இருக்க வரம் கொடு ....!
எண்ணமாக நானிருக்கின்றேன் - நீ
எழுத்தாய் இருக்க வரம் கொடு ....!
சிந்தனையாக நானிருக்கின்றேன் - நீ
செயலாக இருக்க வரம் கொடு ....!
புயல் காற்றாய் நானிருக்கின்றேன் - நீ
தென்றலாக மாற வரம் கொடு ....!
வான வில்லாக நானிருக்கின்றேன் - அதில் நீ
வண்ணமாக இருக்க வரம் கொடு ........!
சுட்டெரிக்கும் தீயாக நானிருக்கின்றேன்
சுடரொளி தீபமாக நான் மாற வரம் கொடு ....!
ஒலியாக நானிருக்கின்றேன் - நீ
இசையாய் இருக்க வரம் கொடு .....!
வானமாக நானிருக்கின்றேன் - அதில் நீ
வண்ண நட்சத்திரமாக வரம் கொடு ....!
கடலாக நானிருக்கின்றேன் - அதில் நீ
வண்ண மீன்களாக இருக்க வரம் கொடு .....!
விதையாக நானிருக்கின்றேன் - அதில் நீ
விளைச்சலாக இருக்க வரம் கொடு ....!
நிலமாக நானிருக்கின்றேன் - அதில் நீ
நெற்பயிராயிருக்க வரம் கொடு ....!
வெறும் வெள்ளைகாகிதமாய் நானிருக்கின்றேன் -அதில் நீ
கவிதையாய் இருக்க வரம் கொடு .....!
வரம் கொடு பெண்ணே வரம் கொடு .......
காதலனாக நான் இருக்கின்றேன் - என்
காதலியாய் நீ இருக்க வரம் கொடுப்பாயா?
பெண்ணே ....!!!!

மிதித்து செல்வாள் என்பதை அறியாமல்...


தேவதையை நினைத்து.....
மலர் போன்ற
அவளின் பாதங்கள்
மண்ணில்
நடக்கா வண்ணம் மலராய் விரிந்தேன் .......
அவளின்
மலர் பாதங்களுக்காக.....!
தன் காதலனோடு
கைக்கோர்த்து
என்னை
மிதித்து செல்வாள் என்பதை அறியாமல்

சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..


தினசரிகளின் சில நொடிகளில்
உன்னைக் கடந்து செல்ல நேர்கையில் எல்லாம்..
வார்த்தைகளோ.. ஜாடைகளோ.. ஏதுமன்றி..
இமை அசைக்காமல்.. விழி எடுக்காமல்..
கூரான பார்வை ஒன்றால்..
குத்திக் கடந்து விடுகிறாய்..
 
கடக்கும் கடைசி நொடித் துளியில்
கள்ளப் புன்முறுவல் வேறு..
 
 
மூர்ச்சையுராமல் மூர்ச்சையுருவதும்..
மயக்கமடையாது மயக்கமடைவதுமாய்..  
நான் தவிப்பது..
சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..
 
 
.

நீ என்னை வெறுக்கும் போது...


உன்னை ரசித்து கவிதை எழுத தெரித்தது
உன்னை வெறுத்து எழுத தெரியவில்லை
முட்கள் நிறைந்த காதல் பயணத்தில்
காயப்பட்டது என் பாதங்கள் மட்டுமல்ல
என் மனமும் கூட தான்...
அன்பு...நட்பு...காதல் என்ற முன்றெழுத்தில்
இணைந்த நாம்...
பிரிவு என்ற அதே முன்றெழுத்தில் பிரிவதா?
ஒரு முறைதான் பிறப்பு வரும்
ஒரு முறைதான் இறப்பு வரும்
நீ என்னை விரும்பும் போது பிறக்கிறேன்
மறுபடியும் நான் இறக்கிறேன்
நீ என்னை வெறுக்கும் போது...

உயிரோடு நான் இறந்து விட்டேன்...


கண்ணீரில் வாழ்கின்றேன்
கனவாகி போனவளே உன்னை நினைத்து
மரணத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
என்னைக் கொல்ல எனக்கு துணிவில்லை.
மதுவில் உன்னை மறக்கலாம் என நினைத்தேன்,
மது அலைகளாய் உன் நினைவுகளை எழுப்பியது.
தூக்கத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
உன்னோடு கைகோர்த்து திரிந்த காலங்கள் கனவில் வந்தது.
தோற்றாலும் விரும்பப்படும் இந்த தெய்வீக காதலை மறப்பதெப்படி...?
சிலுவைகளாய் உன் நினைவுகளைச் சுமந்து கொண்டு,
உயிரோடு நான் இறந்து விட்டேன்...