Saturday, 14 January 2012

பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களோடு…


வெளிச்சத்தோடு சமைக்க ஆகாயம்..
மண்பானையில் நிலம்..
அரிசியோடு நீர்..
வேக நெருப்பு..
வெந்து நுரையாய் பொங்கும் காற்று..
இப்படி பஞ்ச பூதங்களும் அடக்கம்
நம் படிப்பறியா பட்டிக்காட்டு உழவன்
பரம்பரையாய் கொண்டாடும் பொங்கலில்..
இன்னும் இருக்கிறது…
பழையன கழிய புதியன நுழைய போகி..
நடப்பவை எல்லாம் மங்களமாக மஞ்சள்..
இனி வரும் காலம் இனிப்பாக கரும்பு..
அக்றிணைகள்மேல் அன்புணர்த்த
மாடுகளுக்கும் மரியாதை..
வீரத்தின் இன்றியமையாமை 
தெளிவாய் கற்க ஜல்லிக்கட்டு..
அடடா..
ஒரு பண்டிகைக்குள் எத்தனை அழகான
வாழ்வியல் நெறிகள்..
நம் தமிழ் மூதாதையர்கள்
நல்லறிவும் நன்றியுணர்வும் மிக்கவர்கள்..
நம்மைப்போல் நாகரீகமெனும் போர்வைக்குள்
நிர்வாணமாய் நிற்பவர்கள் அல்ல..
ஆழமான அர்த்தம் கொண்ட
நம் தமிழர் திருநாளின்
தனித்துவ மகத்துவம் புரியாமல்
நாமோ பேருக்கு பொங்கல் வைத்துவிட்டு
ஹாப்பி பொங்கல் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு
அப்படியே மூழ்கிவிடுகிறோம்
தொலைகாட்சி பெட்டியில்
நடிகைகளின் நேர்க்காணல் பார்க்க..
எம்மக்களே..
வாழ்வியல் பொருள் விளக்கும் பொங்கல் பண்டிகையின்
உண்மை அர்த்தம் உணர்ந்து
நம் தரணிக்கும் தமிழுக்கும் தமிழர்க்கும்
பெருமை சேர்க்கும் வழியைக் கருதி இனி
எடுத்துக்கொள்வோம் புது உறுதிமொழி..
பண்பாட்டுக் களஞ்சிய பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களோடு…
பிரியமுடன்…
பிரியன்…
.

பொங்கலோ பொங்கல்…..


தீமைகளைக் கண்டால்
தீயாகி எரித்து..
மனதை என்றும்
சுத்தமாக்கி வைத்து..
புனிதமாய் வாழ்பவனின் போகி…..

கடன் வாங்கி பயிர் செய்து
பசியோடு அடுத்தவன் வயிறு நிரப்பும்
எம் பாசமான உழவனின் வீட்டுப் பொங்கல்..

உழைத்துக் களைத்த கால்நடைகளின்
கால்கள் தொட்டு வணங்கி..
ஜல்லிக்கட்டில் துள்ளித் தெரியும்
காளைகளை அடக்கி..
நெற்றிப் பொட்டில் வெற்றி திலகமிடும்
எம் ஊர் இளைஞனின் மாட்டுப் பொங்கல்…..

சுற்றம் நட்பு உள்ளம் குளிர
இன்பம் பகிர்ந்து..
துன்பம் துடைத்து..
என்றும் மற்றவர்க்கு
துணையாய் நிற்பவனின் காணும் பொங்கல்…..

பொங்கல் பொங்கல்..
பொங்கலோ பொங்கல்…..
பொங்கல் பொங்கல்..
பொங்கலோ பொங்கல்…..

அது சரி…..
வீட்டுக் குக்கரில் அரிசி கொட்டி..
கேஸ் அடுப்பில் நெருப்பை ஏற்றி..
சூரியின் எழுந்த நெடுநேரம் கழித்து எழுந்து..
பெயருக்கு பொங்கலோ பொங்கல் சொல்லி..
சம்பிரதாயத்திற்க்காய் சாமி கும்பிடும்
வறண்ட மனங்களுக்கு எதற்கு…
சாமானியன் கொண்டாடும்
சக்தி மிக்க பொங்கல்……

Sunday, 8 January 2012

வேண்டும் உன் பாசம்....!


அமைதியான நேரம் - என்
மனது தேடிய நேசம்
அருகில் இல்லாத சோகம்
பனித்தது கண்களில் வந்து
கன்னங்களை வருடி இங்கு
கேள்விகள் கேட்டது நெஞ்சை
விடைகள் தேட எண்ணி
தோற்றது எந்தன் இதயம்
பாசப்பிரிவுகள் இன்று
பந்தாடுது இன்ப நினைவை
வேச நெஞ்சங்கள் மத்தியில்
வேண்டும் உன் பாசம்....!

கவலை கொள்ளாதே!

மனசே!
மனசை தொட்டு
மனதார சொல்கிறேன்
மனம் வருந்தாதே!
உனக்கு அழைப்பு எடுக்கும்
ஒவ்வொரு கணங்களும்
என் மனதில் ஏதோ
சிறிதாக நெருடல்!

உனக்கு அது தொலைபேசி
எனக்கு அது தொல்லைபேசி
உன்னோடு பேசும்
ஒவ்வொரு நிமிடமும்
அலைவரிசை குழப்பத்தால்
உண்டாகும் கோவத்தில்
உன்னை நான்
காயப்படுத்திடுவேனா என்று!

கவலை கொள்ளாதே!
தடங்கலின் போது
நான் கோவிப்பது
உன்னை அல்ல
உன் தொலைபேசியை மட்டும் தான்
அன்பாக பேச எடுத்தால்
அதற்கும் ஒரு விக்கல்
அவசரமாய் பேச எடுத்தால்
அடிக்கடி கட்

பொறுமைக்கும் எல்லை உண்டு
போதும் இந்த நச்சரிப்பு
சீக்கிரமாய் செயல்படு
மாற்றி விடு உன் சிம் காட்டை.

நீ தான் என் வாழ்க்கை என்று

உன்னை பார்க்க மறுக்கும்
கண்களுக்கும்
உன்னோடு பேச மறுக்கும்
உதடுகளுக்கும்
உன்னை தேட மறுக்கும்
இதயத்துக்கும்
உன்னை தீண்ட மறுக்கும்
ஸ்பரிசங்களுக்கும்
எப்படி புரிய வைப்பேன்
நீ தான் என் வாழ்க்கை என்று

இதயத்திற்கு புரியவைக்க முடியவில்லை!


நீ தொலைவில் இருப்பதை
புரிந்துகொள்ளும் எனக்கு
உன் நினைவுகளின் பிடியில்
சிக்கித் தவிக்கும் என்
இதயத்திற்கு புரியவைக்க
முடியவில்லை!
உன் நினைவுகள்
இதயத்தில் கூட இருப்பதால்
அருகிருப்பதாய் நினைக்கிறது
எப்படி சொல்வது
நம் மனங்கள் தான் அருகில்
நிஜத்தில் தொலைவில் என!

கண்ணீராய் நுழைந்து விட்டாய்..!!!

இமைகளை காற்று கூட 
நுழைய முடியாதவாறு தான் 
இறுக்கமாய் மூடியிருந்தேன்....!!? 
சாமர்த்யக்காரியடி-நீ ..!! 
எப்படியோ கண்ணீராய்
நுழைந்து விட்டாய்..!!! 

இதயத்தில் சுமந்தபடி!

உன்னுடனான நட்பின்
இனிமையான நாட்களில்
உன்னை உயிருக்கு உயிராக
நேசித்ததை தவிர
தவறென்று நானிங்கு
ஆற்றியது தான் என்ன!
நம் நட்பின் அன்பிற்கு
தண்டனை தான் இந்த
நட்புக்கு இடையான
பிரிவின் இடைவெளி?
இடம் மாறி நாம்
தொலைவாகி போனாலும்
இதயங்கள் அருகிருந்து
இடைவிடாது துடிக்கிறது
இனிய நினைவுகளை
இதயத்தில் சுமந்தபடி!

உன்னை இழக்க நான் தயாரில்லை


கருவறையிலிருந்து இறங்கி
கல்லறை வரை
நடந்து போகும் தூரம் தான்
வாழ்க்கை
அந்த வாழ்க்கையில்
எனக்கு கிடைத்த
பொக்கிஷம் நீ
எதற்காகவும் உன்னை
இழக்க நான் தயாரில்லை

ஆண்டவன் கொடுத்த ஆயுள் தண்டனை!!!!!!!!!!

சொல்லி வராதது காதல்.......
சொல்ல முடியாததும் காதல்.......
சுகமாய் வருவதும் காதல்.......
சுமையாய் போவதும் காதல்.......
தூக்கத்தை தொலைப்பதும் காதல்.......
எக்கத்தை வளர்ப்பதும் காதல்.......
கனவை தருவதும் காதல்.......
நினைவாய் களைப்பதும் காதல்.......
நினைத்தால் இனிப்பதும் காதல்.......
நிம்மதியை இழப்பதும் காதல்.......
காதல்!
இனிக்கின்ற விஷம்,
கலைகின்ற நிஜம்,
சுடுகின்ற தென்றல்,
குளிர்கின்ற வெப்பம்,
ஆகா மொத்தத்தில் முன்னுக்கு
முறநாய் ஆண்டவன்
கொடுத்த ஆயுள் தண்டனை!!!!!!!!!! 

காதல் வாழ்க்கையும் தான்


இதயமென்ற கோவிலிலே
காதல் என்ற விளக்கேற்றி
கனவுகள் எனும் எண்ணை ஊற்றி
கன்னியிவள் காத்திருந்தாள்!

சில்லென்ற காற்றிற்கு
கைகளையே அணையாக்கி
காற்றிற்கு வேலி போட்டு
காத்து வந்தாள் விளக்குதனை!

கைகளையும் மீறி இங்கே
காற்றெல்லாம் புயலாகி
சுடரோடு சேர்த்து இங்கு
விளக்கையும் அழிக்கிறது

விதி விட்ட பாதையிலே
விளக்கோடு சேர்ந்திங்கு
விட்டில் பூச்சியாய் எரிவது
இவள் ஆசைகள் மட்டுமல்ல
காதல் வாழ்க்கையும் தான்

இதயமும் தான்!


உன்னை பார்க்க துடிக்கும்
உன்னை பிரிந்த என்
ஊமை விழிகளுக்கு
உன் முகம் காட்ட
ஏன் தயங்குகிறாய்?

தினம் தினம் இங்கு
உன்னை எண்ணி
ஏமாற்றம் கொள்வது
நான் மட்டுமல்ல
என் விழிகளும் தான்!

ஒவ்வொரு நொடியும்
உன் ஏக்கங்களால் இங்கு
உடைந்து போவது
நான் மட்டுமல்ல என்
இதயமும் தான்!

நீ ஏன் புரிய மறுக்கிறாய்.........!


நான் உன் உணர்வுகளை மதிக்கிறேன்
உன் காயங்களுக்கு மருந்தாகிறேன்
அது உனக்கும் புரிகிறது - ஆனால்
நீ நினைப்பது தான் தவறு
நான் உன்னோடு மட்டும்
உறவாக இருக்க வேண்டும் என்று!
உனக்கு நான் மட்டும் தான்
உறவாக இருக்கலாம்
ஆனால் எனக்கு அப்படி இல்லை
உன்னை விட பிடித்தவர்கள்
உயிரான உறவாக உள்ளார்கள்
இதை நீ ஏன் புரிய மறுக்கிறாய்.........!

இதயத்தில் சுமந்தபடி!

உன்னுடனான நட்பின்
இனிமையான நாட்களில்
உன்னை உயிருக்கு உயிராக
நேசித்ததை தவிர
தவறென்று நானிங்கு
ஆற்றியது தான் என்ன!
நம் நட்பின் அன்பிற்கு
தண்டனை தான் இந்த
நட்புக்கு இடையான
பிரிவின் இடைவெளி?
இடம் மாறி நாம்
தொலைவாகி போனாலும்
இதயங்கள் அருகிருந்து
இடைவிடாது துடிக்கிறது
இனிய நினைவுகளை
இதயத்தில் சுமந்தபடி!

சரி செய்ய முடியவில்லை!!அன்றைய நாள் ஏன் உதயமானது
என்று சலித்துக் கொள்ள மட்டுமே
என்னால் முடிகிறது...
ஏனெனில் அன்று நடந்து முடிந்த
எதையுமே என்னால் சரி
செய்ய முடியவில்லை!! 

என் உண்மைக் காதலை!


அன்பே!
நாம் காதல் மொழி பேசி
கனிவாக திரிந்த போது
நமக்கு நட்பாக இருந்த
இந்த நாய்க்குட்டிக்கு
இருக்கும் பாசம் கூட
என் காதலி உனக்கு
இல்லாது போனது ஏனோ....?
என் மணவாழ்க்கையில் தான்
உன்னை பகிர விரும்பாத நீ
என் கல்லறையிலாவது
காணிக்கை செலுத்தி இருக்கலாமே
என் உண்மைக் காதலை!