Tuesday 20 September 2011

இறந்துவிட்டேன் மறைந்து விட்டேன்......


நீ விலகியது விளங்காமல்
காமம் நீங்கி காதலித்தேன்
கற்பனையில் வாழ்ந்து
சிந்திக்க மறந்தேன்
குடிப்பது குலத் தொழிலாய்
ஆத்திரம் என் பெயரின் சொல் பொருளாய்
புகைப்பது புது பழக்கம்
வெற்றிடத்தில் என் வாழ்வின் துவக்கம்
நண்பர்கள் தொலைத்து
நாணயம் இழந்தேன்
கண்ணிமை அசைவுக்கு
யாகங்கள் செய்தேன்
நெருப்பு சாம்பலாகி
விடியலில் குப்பையானேன்
விடிந்தபின்னே வேங்கையும் ஆனேன்
உண்மை சொன்னால்
இருந்தும் இறந்துவிட்டேன்
வாழ்ந்தும் மறைந்து விட்டேன்

ஒவ்வொரு மூச்சிலும் உன் நினைவு .........


மறக்க நினைத்தால் மலருகின்றது.. 
வெறுக்க நினைத்தால் வளர்கின்றது.. 

அழிக்க நினைத்தால் அணைக்கின்றது.. 
முறிக்க நினைத்தால் முளைக்கின்றது.. 

முடியவில்லையடி.... 

உன்னை விட்டு நான் விலகிவிடும் முன், நான் என்னை விட்டும் விலகிட வேண்டும்.. 

முதன் முறையாக மனம் 
விடியா இரவை வேண்டுகின்றது! 
விடை இல்லா கேள்வியைக் கேட்கின்றது! 

நிலவைக் கண்டால் என் நினைவு உனக்கு வருவது போல் 
நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் உன் நினைவு எனக்கு

Monday 19 September 2011

உன் நினைவு...


மறக்க நினைத்தால் மலருகின்றது..
வெறுக்க நினைத்தால் வளர்கின்றது..
அழிக்க நினைத்தால் அணைக்கின்றது..
முறிக்க நினைத்தால் முளைக்கின்றது..
முடியவில்லையடி....
உன்னை விட்டு நான் விலகிவிடும் முன், நான் என்னை விட்டும் விலகிட வேண்டும்..
முதன் முறையாக மனம்
விடியா இரவை வேண்டுகின்றது!
விடை இல்லா கேள்வியைக் கேட்கின்றது!
நிலவைக் கண்டால் என் நினைவு உனக்கு வருவது போல்
நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் உன் நினைவு எனக்கு

Wednesday 7 September 2011

இப்படிக்கு,,,,


அன்பே என் காதல் 
கை கூடவில்லையே 
என்று நான் புலம்ப வில்லை, 

உன்னை முழுதாய் அறிந்து 
உனக்காக உயிர் தியாகம் 
செய்ய துணிந்த என்னை விட 
உன்னை வேர் யார் சந்தோசமாக 
வாழ வைக்க முடியும் 
என்று நினைத்து நினைத்து தான் 
என்றும் என் கல்லறையிலே 
புலம்பிக் கொண்டிருப்பேனடி, 

நீ என் காதலை 
ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு 
என்ன காரணம் என்று எனக்கு தெரியாது 
ஆனால் நான் உன்னை அதிகமாக நேசிக்க காரணம் 
நீ என் மீது காட்டிய அளவில்லா அன்பு தான், 

அன்பே நான் புதைக்க படும் 
கல்லறையில் சுற்றி எங்கும் 
உன் நினைவுத் தூண்களை நாட்டிக்கொள்வேன் 
என் ஆயுள் முடியும் வரை 
உன் நினைவோடே 
இந்த பூமியில் மண்ணோடு மண்ணாக 
என் கல்லறையிலே மக்கி கொண்டிருப்பேன்........... 

இப்படிக்கு,,,,,,,,,,,உன்னவன் 


புகை....


புகைபிடிக்கையில்,
புகையை, பிடிக்க நினைக்கிறன்.
கை நழுவி,
காற்றோடு கலந்து விடுகிறது,
என் உயிரையும் சேர்த்துக்கொண்டு.
தீர்ந்து விட்ட பொருளை,
தேடும் தேடலில்,தொலைந்து போகிறேன் ,
என் விரல் எறியும் புகைமண்டலத்தில்.

நேற்றே நான் இறந்து விட்டேன்...

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....
அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?
நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.
எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?
என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?
என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.
எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.
உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...
என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.
மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...
அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.
தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...
உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.
என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.
யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.
என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்...
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?
நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.
பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..
வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?
என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?
வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?
எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.
என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்...

சிறை....


உன் வாழ்நாளின்
முதல் பத்து திங்கள்
என் கருவறையில்
உனை சிறை வைத்தற்காகவா
என் வாழ்நாளின்
கடைசி பத்தாண்டுகள்
முதியோர் இல்லத்தில்
எனை சிறைசெய்தாய்
எனது அருமை மகனே?

Tuesday 6 September 2011

நம்பிக்கையோடு.....


இந்தக் கவிதை சொல்லக்கூடாத ஒரு உண்மை.. பலர் சொல்லத் தயங்கிய உண்மை.. உண்மையில் சொல்லப் பட வேண்டிய உண்மை ! 

எந்த படைப்பாளியும் தொடுவதற்குத் தயங்குகிற திசை இது.. ஆனால் யாராவது ஒருவர் தொட்டாக வேண்டிய அவசியம் மிக்கதும் இதுதான் ! 

இதுவரை எனது கவிதைகளுக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். இந்தக் கவிதைக்குப் பிறகு அப்படித் தொடர்ந்து இருப்பார்களா என்பது சந்தேகம்.. இருந்தால் சந்தோஷம் ! 

என் வார்த்தைகளில் எங்கேனும் முரட்டுத்தனம் தெரிந்தால் அதற்காய் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன், ஆண்மைத் திமிர் தெரிந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ! 

இனி கவிதைக்குள்…. 

இனிய பெண் தோழிகளே.. நவயுக தேவதைகளே.. 
நகரும் அருவிகளே.. வளர்ந்த நிலாக்களே.. 
கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது உங்களுடன்.. 
கார சாரமாய்.. 

இனி வருபவை உங்கள் அனைவரைப் பற்றியும் அல்ல.. 
உங்களில் சிலரைப் பற்றி ! 

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை 
நீங்கள் தப்பாய் புரிந்து கொண்டீர்கள் எனத் 
தோன்றுகிறது எனக்கு ! 

இப்போதெல்லாம் ஆடை பாதி ஆள் மீதிஎன 
நீங்கள் திரிவதைக் காண முடிகிறது ! 

இயற்கையின் படைப்பில் 
அழகானவர்கள் நீங்கள் என்பதை 
என்றும் மறுப்பதற்கில்லை.. 

ஆணினம் அனைத்தும் உங்கள் விழியசைவுகளில் 
விழுந்து விடுவதும் உண்மை ! 

அப்படி இருக்க 
அரைகுறை ஆடைகள் அணிவதன் மூலமும் 
அங்கத்தின் பாகங்கள் அப்படியே தெரிய 
வலம் வருவதன் மூலமும் 
எதை உணர்த்த விரும்புகிறீர்கள் நீங்கள் ? 

உங்கள் அழகை மெருகூட்டுவதற்காய் எனச் சொல்லி 
எடைக் குறைப்பு செய்கிறீர்கள்.. 
அது உங்கள் தனிப்பட்ட விஷயம் ! 

ஆனால் உடைக் குறைப்பு செய்வது 
தனிப்பட்ட விஷயம் இல்லையே ! 

சேலையின் அசவ்கர்யம் தவிர்க்க 
நீங்கள் சுடிதாருக்கும், ஜீன்சுக்கும் 
மாறியதை வரவேற்கலாம் ! 
அத்தோடு நில்லாமல்.. 

கை வைக்காத மேல் சட்டையின் கை இடுக்கு இடைவெளிகள்.. 
மேல் உள்ளாடை தெரிகின்ற சன்னமான குர்தாக்கள்.. 
கைகளைத் தூக்கினால் எடுப்பாய் இடுப்பு பிரதேசங்கள் 
தெளிவாய்த் தெரிகின்ற டைட் ஷர்ட்டுகள்.. 
கீழ் உள்ளாடை தெரிகின்ற லோ வெஸ்ட் ஜீன்சுகள்.. 
இறுக்கிக் காட்டும் மார்புப் பகுதியில் 
ஏடாகூடமான வார்த்தைகள் பதித்த டி ஷர்ட்டுகள்.. 

இப்படி உங்களை அங்குலம் அங்குலமாய் 
அடுத்தவர்களுக்குக் காட்டுவதன் மூலம் 
என்ன சொல்ல வருகிறீர்கள் ? 

உடல் பிதுங்கி 
அங்கங்கள் அங்கங்கே அப்படியே 
அப்பட்டமாய் திமிறித் திணறி நிற்க 
நீங்கள் அணியும் உடைகள் 
உங்களுக்கு அப்படி என்னதான் தருகின்றன ? 

உங்களின் ஜன்னல்களை 
நீங்களே திறந்து வைத்து விட்டு 
ஆண்களின் கண்களை மட்டும் 
கதவடைக்கச் சொல்வதில் என்ன நியாயம் ? 

அதற்காய் ஆண்கள் அத்தனை பேரையும் 
நான் ராமனாக்கவில்லை ! 

உண்மையில் ராமனே சீதையை சந்தேகித்து 
தீயில் இறங்கச் சொன்ன 
சராசரி மனிதன்தானே ! 

இருந்தும் கடந்த சில வருடங்களாக 
அதிகமாய் சமூகத்தை கெடுத்திருப்பவை 
பாலியல் குற்றங்கள்தான் ! 

இவை எப்படி நிகழ்கின்றன ? 
பத்து வயது சிறுமியை 
பலாத்காரம் செய்கிற வன்மம் 
எப்படி முளைத்தது ? 

உண்மையில் ஊரெங்கும் உலவும் 
உங்கள் தேகம் பிதுக்கும் உடைகள் காட்டும் 
உடல்களின் இடைவெளிகள் கண்டுக் கண்டு 
பழுதடைகிற நெஞ்சம்.. 

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 
தனிமையின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 
ராட்சச விஷ்வரூபம் எடுத்து 
மொத்தமாய் வரம்பு கடந்து 
தன வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறது ! 

அத்தனைக்கும் காரணம் 
நீங்கள்தானென சொல்லவில்லை.. 
முக்கியக் காரணமாய் நீங்கள்…. 

அதற்காய் உங்களை 
ஆடைக் கூண்டுகளுக்குள் 
அடைந்து கிடக்கச் சொல்லவில்லை.. 

அநாகரீகமற்ற.. அடுத்தவர் கண்கள் கூசாத.. 
ஆண்கள் அவதிப்படாத ஆடைகளை.. 
முகத்தைத் தாண்டி மற்றதைப் 
பார்க்கத் தூண்டாத நாகரீக உடைகளை.. 
நீங்கள் அணிவதால் 
எந்த விதத்திலும் குறைந்து விடப் போவதில்லை.. 

அங்கம் காட்டவில்லை என்பதற்காய் 
ஆண்களும் உங்களைப் பார்க்காமல் இருக்கப் போவதில்லை ! 

அதனால் உங்கள் உடைகளை உன்னதமாய் உடுத்தி 
இனி வரும் சமூகத்தை 
பாலியல் வக்கிரங்களில் இருந்து 
கொஞ்சம் காப்பாற்ற உதவுங்கள்.. 

ஏன் எனில் என்றும் புனிதமானவர்கள் நீங்கள் ! 
எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் நீங்கள் ! 
எங்களின் தலைமுறைகளைப் படைக்கப் போகிறவர்கள் நீங்கள் ! 
எங்களின் நேற்றும் இன்றும் நாளையும் நீங்கள் !!! 

இது ஒரு ஆண் பெண்கள் மீது போடுகின்ற பழியும் அல்ல.. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாடுகின்ற இகழ்ச்சியும் அல்ல.. 

ஒரு நண்பன் தோழிகளுக்குக் கூறும் அன்பான அறிவுரை ! ஒரு கவிஞன் சொல்லத் தவித்த கசப்பான உண்மை ! ஒரு படைப்பாளி தன பெண் சமூகத்தை விழிப்படைய வைக்கச் செய்யும் சின்ன முயற்சி ! 

பலிக்கும் என்ற
நம்பிக்கையோடும்.. 
பிரியமுடன்… 
பிரியன்…


உன்னை காதலிப்பதனால் ...?!!!


கஷ்டங்களை மட்டும் 
அனுபவித்திருக்கிறேன் 
உன்னை காதலித்ததனால்... 
நீயாவது அங்கே 
சந்தோஷங்களை 
அனுபவிக்கிறாயா 
உன்னை காதலிப்பதனால் ...?!!! 

அவளுக்காக......


அவள் என்னை 
மறந்து விடு என்றாள்.... 
அவள் என்னை மறக்காமல் 
மறந்து விட்டதாக கூறி..... 
நான் 
அவளை மறக்க நினைக்கும் 
போதெல்லாம் ..... 
அவள் நினைவுகள் 
தினம் என்னை கொள்கிறது..... 
இந்த வேதனைக்கு 
நான் இறந்து விடுவேன்........ 
அவளுக்காக......

ஆயுள் முழுதும்.................


ஐந்து வருடங்கள் 
கழிந்து 
இன்று 
அவளை 
பார்த்த பொழுதுதான் 
தெரிந்தது 
என் காதல் 
காதலோடு 
முடிந்து போனததற்கு 
காரணம் 

அன்பான துணை 
அழகான குழந்தை 
அமைதியான இல்லம் 
வளமையான வாழ்க்கை 

சந்தோசத்தின் 
உச்சத்தில் 
நான் 

நீ 
இந்த 
ஏழை கவிஞனின் 
கை பிடித்திருந்தால் 
அந்த 
பாரதி கண்ணம்மாவாக 
அரிசி பருப்பிர்க்குமே 
அழுது 
கொண்டிருந்திருப்பாய் 

என் காதலியே 
என்னை 
காதலிக்காததற்கு 
நன்றி 

என் ஆண்டவனே 
என் காதலியை 
என்னை காதலிக்காமல் 
செய்ததற்கு 
நன்றி 

உன் 
சந்தோசத்தின் 
உச்சம்தானடி 
என் 
காதலின் 
மிச்சம் 

அது போதும் - இந்த 
ஆயுள் முழுதும்.................

என் கண்ணீரை உணர வேண்டும்....


இறப்பதற்குள் ஒரு முறை, 
உன் சட்டை வாசம் நூகர வேண்டும் 
உன் கட்டை விரலில் என் பற்களை பதிக்க வேண்டும் 
உன் நிழலாவது என் தனிமையை உணர வேண்டும் 
உன் கனவாது என் வருகைக்கு வழி விட வேண்டும் 
உயிரே...................... 
உன் இதயம் ஒரு முறையாவது என் கண்ணீரை உணர வேண்டும்

Monday 5 September 2011

இயந்திரமயமான வாழ்க்கை .......


காலையில் எழுந்ததும் 
பல் துலக்கி 
குளித்து முடித்து 
ஆகாரம் உண்டு 
ஒன்று/இரன்டு மணிநேரம் பிரயாணித்து 
அலுவலகம் சேரும் முன் 
கடிகாரம் பகல் 11-ஐ தொட்டுவிடும் 

கணிப்பொறியை திறந்து 
அன்றைய செய்திதாள்களை அலசிவிட்டு 
மினஞ்சல்களுக்கு பதில் அனுப்பி முடித்து 
பார்த்தால் 
கடிகாரம் பகல் 1 என பல் இளிக்கும் 

மீண்டும் ஆகார மூட்டையோடு 
சென்று திரும்பினால் 
அரை நாள் ஓடியிருக்கும் 

மீண்டும் கணிப்பொறியை திறந்து 
அன்றைய பணிகளை செய்து 
அனுப்பவேண்டிய மினஞ்சல்களை அனுப்பி முடித்து 
திரும்பி பார்கையில் 
சில/பல SMS / Missed calls என் கைபேசியில் தொற்றி கொண்டிருக்கும் 
அப்போதுதான் நினைவிற்கு வரும் 
மனைவி வாங்கி வர சொன்ன பொருட்கள் 
ஆனால் அதற்குள் 
கடிகாரம் இரவு 8-ஐ தொட்டுவிடும் 

மீண்டும் ஒன்று/இரன்டு மணிநேரம் பிரயாணித்து 
வீட்டை அடைந்து 
டிவி-ல் முகம் புதைத்து 
இரவு ஆகாரம் முடித்து 
வாழக்கையின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளமலே... 
வாழக்கையை ரசித்து வாழ்வது எப்படி 
என்று அறிந்துகொள்ளமேலே... 
உறங்கி போகிறோம்...


தூர் வார கிளம்புங்கள் ....


சமுதாய கிருமிகளும் 
மத வெறி நாய்களும் 
பொய் பிசாசுகளும் 
பித்தலாட்ட குள்ள நரிகளும் 
உயிர் உறிஞ்சும் ஒநாய்களும் 
பிணம் தீனி கழுகுகளும் 
வாழும் அரசியல் சாக்கடையை 
பயம் என்னும் கருவி கொண்டு 
தூர் வார கிளம்புங்கள் 
இவர்களையும் மக்களை சேவிககும் 
நன்றயுள்ள நாயகளாக்குவோம்


முதிர் கன்னி ....


முதிர் கன்னி 

இருண்ட 
அவளது வாழ்வில் 
மின்னியது அவளது நரைமுடி மட்டுமே 


வெகு நாட்கள் இல்லை..


எழுதுகிறேன் என் எதிர்காலத்தை... 
எழுத்தால் அல்ல! எண்ணங்களால்! 
எண்ணங்கள் நிறைவேறும்போதுதான்... 
என் வாழ்விற்கு ஒரு அற்தம் கிடைக்கும்! 
அதற்கு இன்னும் வெகு நாட்கள் இல்லை..

அடுத்த தலைமுறையையாவது!!!


கருணை கொலை 
செய்யுங்கள் 
எங்களை!!! 

புரிந்துகொள்ளாத 
உறவுகளால் 
பாதி பித்து 

புரிந்தும் 
சேரமுடியததால் 
மனத்தால் 
பாதி பித்து 

பொய்யுரைத்து 
பணிபெற இயலாத 
மன தைரியத்தால் 
பாதி பித்து 

அடுத்த வீட்டு 
அரை குறைகளுடன் 
ஒப்பிடுகையில் 
அரை பித்து 

சொந்தங்களில் எங்கள் 
சந்தங்கள் பாடுவதால் 
பாதி பித்து 

எங்கள் வாழ்க்கையை 
மாற்றும் ஜோசியர்களால் 
மன பித்து 

அவர்களை நாடும் 
இவர்களால் 
பாதி பித்து 

தனிமையின் 
எண்ணத்தால் 
பாதி பித்து 

தவறான 
வழிகாட்டுதலால் 
பாதி பித்து 

முழு பித்து 
ஆகு முன் 
எழுதிய 
மன ஒத்த 
சாசனம் 

முழு பித்தும் 
பிடித்துவிட்டால் 
கருணை கொலை 
செய்யுங்கள் 
எங்களை!!! 

விட்டு வையுங்கள் 
அடுத்த 
தலைமுறையையாவது!!! 

நெடுந்தூர பயணம்


நெடுந்தூர பயணம் 
தொடங்கிய இடம் நினைவில் இல்லை 
முடியும் இடமும் தெரியவில்லை 

இத்தனை வருட பயணத்தில் 
இலக்கை இன்னும் அடையவில்லை 
இலக்கே எனக்கு புரிய வில்லை 

என்ன கொடுமை சார் இது 
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ? 
ஒன்னும் தெரியாமலயே 
பயணிக்கிறேன் ........ 

கடந்து வந்த பாதையை 
திரும்பி பார்த்தேன் 
தொடங்கிய இடம் தெரியவில்லை 

தடுக்கி விழுந்த இடம் 
வழுக்கி விழுந்த இடம் 
முட்டிக் கொண்ட இடம் 
எல்லாம் தெரிகிறது...... 

எங்கே போகிறேன் 
ஏன் போகிறேன் 
என்றுதான் தெரியவில்லை...... 

வேண்டும்..!வேண்டும்..!


தனிமை வேண்டும் - அதில் 
இனிமை வேண்டும் 

ஆற்றல் வேண்டும் - யாருமதை 
போற்றல் வேண்டும் 

நேர்மை வேண்டும் - எப்போதும் 
உண்மை பேசவேண்டும் 

கனிவு வேண்டும் - என்றும் 
பரிவு யாரிடத்திலும் வேண்டும் 

ஏற்றமிகு எண்ணம் வேண்டும் - அதை 
எப்போதும் காத்தல் வேண்டும் 

பெருங்கனவொன்று வேண்டும் - அதுவும் 
பொய்க்காது நடவவேண்டும் 

மனையாளொருத்தி வேண்டும் - என்றும் 
அவளிடமே காமம்வேண்டும் 

நண்பனொருவன் வேண்டும் - அவன்மேல் 
நம்பிக்கை எப்போதும் வேண்டும் 

பகைவன் வேண்டும் - அவன் 
தீயஎண்ணங்களாக இருக்கவேண்டும் 

இறைவனை புரிய வேண்டும் - அவன் 
ஒருவனே என்றுலகறிய வேண்டும் 

நல்லோரை எல்லோரும் காணவேண்டும் - நாம் 
இல்லாரை எந்நாளும் உயர்த்தவேண்டும் 

எம்மொழியும் செம்மொழியாக வேண்டும் - அதில் 
நம்செந்தமிழே உயர்ந்ததென போற்றவேண்டும் 

மொழிப்பற்று நாட்டுப்பற்று இருக்கவேண்டும் - அனால் 
இனவெறியை மதவெறியை அறுக்கவேண்டும் 

யாரும் தான்யாரென்றறிய வேண்டும் - யாரும் 
மனிதன்தானென்று எல்லோருக்கும் புரியவேண்டும்..!