Monday, 13 June 2011

கா(தல்)மம்

காளைப் பருவத்தில் அவன்
கன்னிப் பருவத்தில் அவள்
காமன் அவன் வருகையால்
காதல் பிறக்கிறது
அவர்களின் உள்ளத்தில்
காதல் எங்களுக்குச் சொந்தம்
உரிமை கொண்டாடுகிறார்கள்
காளைப் பருவம் சுமக்கும்
ஆணும் பெண்ணும்
வயது எனும் வேலிக்குள்
ஒருபோதும் சிறைபடாதது
காதலும் காமமும்
காமம் கலக்காத காதலில்லை
காதலில் காமம் இல்லையென்றால்
அது காதலில் சேர்வதில்லை
எல்லா உறவிலும் காதலுண்டு
காமத்தை சிறை இடும்
உறவுகளும் உண்டு
காமத்தை புசித்துவிட்டு
காதலை புறம் தள்ளுபவர்கள்
உடல் தின்னும் மனிதர்கள்
காதலை புசித்துவிட்டு
காமத்தை புறம் தள்ளுபவர்கள்
உணர்ச்சியை கொல்லும் மனிதர்கள்
காதலையும் காமத்தையும்
பேதமின்றி புசித்தாலே
சுவையின் மகத்தும் உணரமுடியும்
தனக்கு உரிமையுள்ளவர்களிடம்
காதலையும் காமத்தையும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
புனிதமாகிறது அவ்வுறவுகள்
காதலை ஒருவரிடத்திலும்
காமத்தை மற்றோருவரிடத்திலும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
சீர்குலைந்து சிதைகிறது அவ்வுறவுகள்

Friday, 3 June 2011

விடை தேடி...........

கருவறை நீர்க்குடம் உடைந்து
உதிரத் துளிகள் படிந்த
உயிர் பொதிந்த மாமிசம்
நீர்நிரம்பிய பச்சை மாமிசத்தில்
உயிர்த்தெழும் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
எத்தனை விசித்திர முகங்கள்
ஏற்கனவே எழுதப்பட்ட விதி
இரவல் மாமிசம் மரணிக்கும்முன்
துடரும் தேடல்களின் வழியே
இரத்த பந்தமென்று சிலர்
உற்ற உறவுகளென்று பலர்
கட்டிய உறவென்று ஒருத்தி
பெத்த உறவென்று அவர்கள்
இவர்களின் உரிமைத் துரத்தல்
காத்திருக்கும் கடமைகள் ஒருபக்கம்
கால நாழிகைகளின் மரணத்தில்
உயிர் உதிர்ந்து கிடக்குது
என் பச்சை மாமிசம்
இதுவரையிலான மண் ஜென்மத்தில்
வென்றேனா இல்லை தோற்றேனா
விடை தேடிச் செல்கிறேன்
இறைவனிடத்தில்

இரவல் புன்னகை ......

விடுப்பின் நாழிகையின் ஆயுள்
மரணிக்க சில வினாடிகள்
பிரிவின் ரணம் அறிந்து 
இரு  உறவுகளின்
உள்மனதின் ஓசையற்ற அழுகை
பெருக்கெடுத்த ஊற்று  நீரைப்போல்
விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த்துளிகள் 
மௌனம் வார்த்தைகளை சிறையிட  
இதழில் ஈரப்பதம் உலர்ந்து
சிவந்து  வாடிய முகத்தில்
இரவல் புன்னகை 
இறுகி  பற்றிப்பிடித்திருந்த 
என்னவளின் கரங்களுக்கு 
இடைவெளியிட்டது
விடுப்பின் இறுதி விடாடி 
இரத்த உறவுகளின் புன்னகை 
வழியனுப்பில்  மீண்டும் ஒரு
திரவியம்  தேடிய  பயணம்

அன்பு நீர் ......

ரும்பு மீசை வளரும்முன்
குறும்பு பார்வை பதித்தாள்
பருவம் எய்திடாத
என் பள்ளித்தோழி
ன் கவனங்களை ஈர்த்தவளோ
வெள்ளை நிறம் உடுத்திய
மலர் இதழில் சிரிக்கும்
மச்சு வீட்டு மங்கை
ளிராத மலர்களின்
அறியாத மனசின்
சொல்லாத் தெரியாத ஆசைகள்
னம் கவர்ந்தவளுக்கு
முதல் முறையாக கடிதம்
தூதுவாக தோழி
வகுப்பறை சபையில்
ஆசிரியரின் பிரம்படி
பெயரில்லாத அவ்வன்பை
கேட்டு வாங்குதல் தவறென
வலியால் நான் துடிக்கையில்
என்னவளின் சிரிப்பு உணர்த்தியது
ளன கேலிச் சிரிப்பாய்
பள்ளி முழுவதும் உயிர்த்தெழ
எனக்காக அழுதது
என்தோழியின் விழிகள் மட்டும்
பிஞ்ச மனசில
பட்ட காயம் ஆறியும்
மாயாத தழும்பாய்
இன்னும் நெஞ்சுக்குள்ள
ருவம் வந்த பின்
மனசுகளை தேடியதில்லை
தேடி வந்த மனசுகள
காயப்பட செய்த்ததில்லை
காயப்பட்ட எம்மனசு
ளிரிலே சிதைந்துபோன
என் நெஞ்சு விதையில்
அன்பு நீர் ஊற்றி
காதலை தளிர விட்டாள்
மாலை இட்ட மங்கை

பெண்மை

ரோஜா இதழ்களின் நடுவே
மொட்டு மல்லிகை சரங்கள்
என்னவளின் வெண்பற்கள்
வெண்ணிலவின் நடுவே
இரு இதழ் ரோஜா
என்னவளின் இதழ்கள்
கால் முளைத்த ரோஜா
வீதியில் நடந்த அடையாளம்
என்னவளின் பாதச் சுவடுகள்
ருப்பு வெள்ளையில்
பூத்த இருமலர்கள்
என்னவளின் விழிகள்
சிதறிய முத்துக்களின்
மெல்லிசை ஒலிகள்
என்னவளின் சிரிப்பு
வெண்பனியில் நனைந்த
ஒற்றை ரோஜா
குளித்த என்னவளின் முகம்
ன்னவள் துயில் கொள்கிறாள்
சலனம் செய்யாமல்
மெல்ல வீசும் தென்றல்
பொய்யெனும் போதையில்
மதிமயங்கும் பெண்மைகள்
மறந்து போகிறார்கள்
உலக அழகில் சிறந்தது
பெண்மை என்பதை
பெண்மையின் அழகை
மிகைப்படுத்திச் சொல்கையில்
உணர்ந்து கொள்ளுங்கள்
அவர்கள் பொய்யர்கள் என்று

குழந்தை ...

திர்ந்து விழுந்த பருவம்
வலிமை இழந்த உடல்
தரையில் இழைந்து நகரும்
எழுபது வயது குழந்தை
கூர்மை மழுங்கிய மதி
சலனங்களால் மூடிய மனம்
சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்
புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்
வெறுக்கும் இரத்த பந்தங்கள்
ஏளனமாய் பார்க்கும் உறவுகள்
கேலி சித்திரமான வாழ்க்கை
என்ன ஜென்ம சாபமோ
புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்
டந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்
ஜென்ம சாபமாக
எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது
இரண்டாம் குழைந்தை பருவம்

பெண்.......

ழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை
லை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை
னிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
விதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து   எறிகிறார்கள்
றைவனின் பிழை
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை

என்னுள் பாதி .........

என் தோளோடு தலைசாய்க்க
தோழியைபோல் தோள் கொடுக்க
நிஜத்தை உணரவைக்க
நிழலாய் கூடவர
என்னுயிராய் வந்தவள்
என் பிரியமான மனைவி
எத்தனை யுகம்தான்
தவம் இருந்தேன்
எத்தனை காலம்தான்
விழித்திருந்தேன்
என் உயிரை தேடி அலைந்தேன்
என் உயிர் என்னிடம்
சேருமா இன்று
என் உயிர் காணமல்
என் ஆயுள் முடிந்துவிடுமா
என்று அச்சம் கொண்டேன் .
ஒரு வலைதளத்தில்
கண்டுகொண்டேன் அவளை
அழகாக சிரித்துகொண்டிருந்தாள்
என்னுள் ஆட்சி செய்பவள்
என் உயிரை கண்டபிறகு
பேசதுடித்தேன் அவளிடம்
முதன் முதலில் அவளின்
இனிய குரலை கேட்டேன்
என்னையே மறந்தேன்
எனக்கு அவள் தோழி ஆனாள்
பிறகு காதலி ஆனாள்
பின் என்னுள் பாதி ஆனாள்
அவள்தான் என் உயிரானவள்
என் உயிர் மனைவி ஆனவள்
என்னை முழுவதுமாக
ஆக்கிரமித்தவள்
என்னில் பாதியனவள்
அவள்தான் ............
என் உயிர்
மனைவி

உணர்வு...........

என்னை அணைக்க
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என்னோடு..
நீதான் என்றும் வேண்டும்
என் உயிருக்கும்...
உணர்வுண்டு... என்று...
உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...
தூரம் எதற்குதான்
தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும்
தூரம் ஒரு தடையா?
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...
என்னோடு என்றும்....
இருப்பாயோ வாய்திறந்து
பதில் சொல் என் அன்பே!

என் அன்பே!

என்னை அணைக்க
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என்னோடு..
நீதான் என்றும் வேண்டும்
என் உயிருக்கும்...
உணர்வுண்டு... என்று...
உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...
தூரம் எதற்குதான்
தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும்
தூரம் ஒரு தடையா?
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...
என்னோடு என்றும்....
இருப்பாயோ வாய்திறந்து
பதில் சொல் என் அன்பே!

எங்கேயடி கற்றுக் கொண்டாய்..?

குறும்புகள் தெறிக்கும்
குதுகல வார்த்தைகள்...
உனை சிலாகிக்க வைக்கும்
என் சில்மிஷங்கள்...
உன் மனதைத் திருடிய
என் எளிமைத் தனங்கள் என
என்னிடமிருந்து
எல்லாவற்றையும்
கற்றுக் கொண்டாய்..!
எனை ஏமாற்ற எங்கேயடி
கற்றுக் கொண்டாய்..?
நீதான் உலகமென இருந்தேன்..!
நீயோ உன் பெற்றோர் காட்டிய
உலகமே பெரிதென்று
எனை உதறிச் சென்று விட்டாய்..!
இல்லை... இல்லை...
எனைக் கொன்று சென்று விட்டாய்..!
என் வாழ்வில் கிடைத்த
மிகப் பெரிய இன்பமும் நீ...
மிகப் பெரிய துன்பமும் நீ..!
எனை நீ எளிதில் மறந்து விட்டாய்...
உன் மனதிலிருந்து எனை
எளிதில் மறைத்து விட்டாய்...
என்னால் அப்படி முடியவில்லையடி
உன்னுடைய ஒவ்வொரு நினைவுகளும்
என்னுள் மாறா ரணத்தை ஏற்படுத்துகிறது...
இது உனக்கு சாதாரணமாக இருக்கலாமடி
ஆனால் எனக்கோ இது சதா 'ரணம்'
இன்பத்தைப் பரிசளிப்பாய் என்றிருந்தேன்
மா ரணத்தை பரிசளிப்பாய் என
இந்த மதிகெட்டவனுக்கு புரியவில்லை
உன் நினைவுகள் என்னுள்
சாட்டையாய் இறங்குகிறது..!
அடித்த வலி தாங்கிக் கொள்வேன்..!
அடி மனதின் வலியை
எப்படித் தாங்க... எப்படித் தாங்க...?
காதலிக்கத் திரணி கொண்ட கன்னியரே
காளைகளை கரம் பிடிக்க மறுத்து
அவர்களின் சிரமறுப்பதேன்..?
காதலெனும் ஆயுதத்தால்
ஆணினத்தை வேரோடு
வீணழிப்பதேன்..?
பொல்லாதக் காதலால் வந்த  வலியினை
வெளியில் சொல்லவும் முடியவில்லை
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை
வாய்விட்டு அழவும் முடியவில்லை
அழாமல் இருக்கவும் முடியவில்லை...
ஆனால் என் மனம் எப்போதும்
அழுது கொண்டேதான் இருக்கிறது...
சூழ்நிலைக் கைதியாக இருக்கும்
பெண்ணுலகமே...
காதல் என்ற கதாயுதத்தால்
என் போன்ற காளைகளை
காயப்படுத்தாதீர்கள்...
அக்காயம்... மரணத்தின் நீட்சி வரை
நீண்டு கொண்டே இருக்கும்..!
நீண்டு கொண்டே இருக்கும்..!

கவிதையெனும் குழந்தை ....

பத்து மாதங்கள் சுமந்து
பெற்றெடுப்பது மட்டுமல்ல
பத்து வினாடிகள்
மனதில் சுமந்து 
பெற்றெடுப்பது கூட குழந்தைதான்..!
என் கவிதைகளைத்தான்
குழந்தை என்று சொல்கிறேன்..!
அதிலும் அக்குழந்தை...
எனக்குப் பிறந்த
குழந்தை என்பைதை விட
நமக்குப் பிறந்த குழந்தை என்றுதான்
சொல்(ல விரும்பு)கிறேன்..!
அதெப்படியடா
அறிவாளி
நம் குழந்தையாகும்..? -
என்று நீ கேட்கலாம்...
ஆணும் பெண்ணும் 
உடலளவில் சேர்வதால்
கண் நிறைந்த குழந்தை பிறக்கிறது..!
உன்னோடு என் நினைவுகள் சேர்வதால்
கவிதையெனும் குழந்தை பிறக்குதடி..!
கண் நிறைந்த குழந்தைக்கு
காரணம் யார் என்று
தாய் சொன்னால்தான்
தந்தை யாரென்று தெரியவரும்..!
என் கவிக்குழந்தைக்கோ...
தந்தை சொன்னால்தான்
இக்குழந்தைக்கு
தாய் நீ என்று தெரிய வரும்..!
கருவைச் சுமப்பதால் நீ தாயாகிறாய்...
உன்னையும் உன் உணர்வுகளையும்
நம் கவிக்குழந்தைகளையும்
சுமப்பதால் நான் எல்லாமுமாகிறேன்..!

இனிமையான நோய் ......

ஊன்… உறக்கம்…
உறைவிடம்…
உறவினம்...
என அனைத்தையும்
மறக்கச் செய்து
சதா சர்வ காலமும் உன்னையே
நினைக்கச் செய்யும்
உலகிலேயே மிகவும்
இனிமையான நோய் காதல்..!

ரோஜா.........

அதிகாலைப் பனியில்
அழகாய்க் குளித்த
ரோஜா மலர் போல
என் முன்னே நீ வந்தாய்...
அந்தியில் வரும் மயக்கம்
எனக்கு அதி காலையில் வந்து விட...
அலுவலக பரபரப்பு
எனை அடித்துத் தள்ள...
உன்னழகை என் கண்ணில்
நிறைத்த படி...
உனைப் பிரிய மனமில்லாமல்
அரை குறை மனதோடு
கிளம்பிச் செல்கிறேன்
அலுவலகத்திற்கு...

உன்னையே ......

ஒரு தாயின் தாலாட்டோ
குழந்தையைத் தூங்க வைக்கும்..!
இசையின் தாலாட்டோ
தனிமையைத் தூங்க வைக்கும்..!
உன் நினைவின் தாலாட்டுகளோ
என் தூக்கத்தை கெடுப்பது
மட்டுமின்றி
நொடிப்பொழுதும்
உன்னையே நினைக்க வைக்குதடி..!

என் காதல் மெய்.......

எனை மறந்தது உன் மனமென்றால்
இறந்து போனது என் மனமன்றோ...
எனைப் பிரிந்தது உன் உறவென்றால்
பிரிந்து போனது என் உயிரன்றோ...
எனை துறந்தது உன் இதயமென்றால்
துடிக்க மறந்ததது என் இதயமன்றோ...
எனை தொலைத்தது உன் கண்களென்றால்
தொலைந்து போனது என் கண்களன்றோ...
ஒரு கணமும் உனைப் பிரியேன்...
உன் துணையாய் நானிருப்பேன்...
என்றாயே பெண்ணே..!
இன்றோ வேறொருவன் துணையாகி
உனக்கு பதில் எனக்கு
துன்பத்தை துணையாக்கி விட்டாயே..!
உன்னைப் போலென்னால்
மாற முடியவில்லையே...
வேறொருத்தியை துணையாக ஏற்க
என் மனதில் இடமுமில்லையே...
என் செய்வேன் பெண்ணே...
காலமெனை மாற்றும் என்றார்கள்
காலம்தான் மாறியது...
உன்னால் ஏற்பட்ட காயம்...
இன்னும்... இன்னும் என் மனதில்...
ஆறவில்லையடி...
அதை ஆற்றவும் நினைக்கவில்லையடி...
காயத்தை ஆற்றி விட்டால்
உன்மேல் நான் கொண்ட மெய்க்காதல்
பொய்யாகிவிடுமடி...
என் மெய் இடுகாடு போகும் வரை
என் காதல் மெய்யானதாகவே இருக்குமடி..!

கண்ணீர்..!

என்னை வலுக்கட்டாயமாக
நிர்வாணப்படுத்திப்
பார்த்த உன் கண்களுக்கு
நான் தரும் பரிசு

வெட்டுப் பட்டு
வீழும் போதும்
வீரமாய்ச் சொன்னது
வெங்காயம்..!

இரட்டைப் பிறவிகள் ..........

செல்போனும் காதலியும்
இரட்டைப் பிறவிகள் போல..!
எப்போதும் நம் அரவணைப்பிலேயே
இருக்க விரும்புவார்கள்..!
அவர்களை கவனிக்கா விட்டால்
முதலில் சிணுங்குவார்கள்..!
சிணுங்கிய பிறகும் வாரி எடுத்து
அணைக்கா விட்டால்
அலறித் துடிப்பார்கள்..!
அதையும் கண்டு கொள்ளாமல்
விட்டு விட்டால்
கோபித்து ஊமையாவார்கள்..!
நாமாய் பார்த்து அவர்களிடம் பேசும் வரை
ஊமையாய்த்தான் இருப்பார்கள்..!

விடிய வேண்டும்.........

விடிய வேண்டும்
என்பதற்காகத்தான்
இரவிலே வாங்கினோம்
சுதந்திரத்தை..!
மாற வேண்டும்
என்பதற்காகத்தான்
ஆட்சியில் கொண்டு வந்தோம்
மாற்றத்தை..!
இலவசங்களை அள்ளிக் கொடுத்து
இந்தியாவின் முதல்
பிச்சைக்காரனாக
தமிழனை மாற்றுவதற்கல்ல..!

வார்த்தைகள்......

உன்னை சந்திக்கும்
தருணமெல்லாம்
வழிதவறும்
என் வார்த்தைகள்
கவிதையாய் வந்து
என் காகிதம்
நிறைக்கிறது
நீ போன பின்பு.

உனக்காக‌......


நீ காலில்
மிதிப்பாயென‌
அறிந்துதான்
முள்ளில்லா
ரோஜா வாங்கிவந்தேன்
நீ வீசியெறிய‌
எளிதாய்
இருக்குமென
எண்ணிதான்
எடை குறைவான‌
பரிசு வாங்கிவந்தேன்
நீ
சிரித்து சிரித்து
சித்ரவதை செய்யதான்
என் உடலில்
உயிர் தாங்கிவந்தேன்
புரிந்து கொள்
மனமே
புரிந்தும் கொல்வதேன்
தினமே

Wednesday, 1 June 2011

நம்பிக்கை............

ர் உறங்கும் நடுநிசி
இடைவெளிகளில் ஊடுருவும் காற்றாய்
என் இரவுக்குள் நுழைந்தவன்
இமைக்கும் நொடிப் பொழுதில்
களவாடினான் என் பெண்மையை
ற்றென்று விழித்தெழுந்து
இருளை ஒளியால் விலக்கி
அவன்முக அடையாளத்தை தேட
மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டான்
கனவில்வந்து பெண்மை திருடியவன்
ருவம் சமைத்த பெண்மையை
அனுமதி இன்றி திருடியவனின்
அடையாள முகவரியை தேடி
மீண்டும் உறங்கச் செல்கிறேன்
கனவில் அவன் வருவான்
என்ற நம்பிக்கையில். . .

அழகிய முத்து..........

நீ அழகிய முத்து
போன்று இருப்பதால்தான்
பெண்ணே…
உன்னைப் பாதுகாக்கும்
சிப்பியாக
நானிருக்க வேண்டுமென்று
ஆசைப்படுகிறேன்..!

பெண்மனசு......


டமைக்குள் ஒளிந்திருக்கும்
அங்கங்களின் இரகசியத்தை
சிந்தையில் உயிர்தெளுப்பும் கயவன்
ச்சை உணர்ச்சிக் கழிவுகளை
அவசராமாய் கக்கி களையும்
மாமிச உண்ணிகள்
ச்சை புணர்தலில்
மதி மயங்கும் ஆண்மகள்
பெண்ணின் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்களை தட்டி எழுப்புவதில்லை
ம் விழியிலும் அகத்திலும்
காம இருளை உடுத்திய
கண்ணுள்ள குருடர்கள் காண்பதில்லை
பெண்ணின் ஆழ்மனதை
பெண் மனப் புத்தகத்தை
திறக்காமலும் வாசிக்கப்படாமலும்
சில ஆண்மைகள் சொல்லித்திரிகிறார்கள்
பெண்மனசு ஆழம் என்று
ப்பன், சகோதரன், கணவன்
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள்
றும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்

போரட்டம் மிகுந்த உலகத்தில்..!

அன்னையின் கருவினில்
ஆலம் வித்தாகி
பூமியின் மடியினில்
ஆலமரமாகி
நின்று நிழல் தர போராடுகின்றேன்..!
அன்னையின் வயிற்றினில்
அடர்ந்த இருட்டினில்
கண்மூடி வாழப் பழகியதால்
அகிலத்து இருட்டினில்
கண் திறந்து வாழப் போராடுகின்றேன்..!
அன்னையின் மடியினில்
தவழ்ந்த போது
வறுமையும் என்னை வளர்த்தது...
என்னுடன் அதுவும் வளர்ந்ததால்
வறுமையைப் போக்க போராடுகின்றேன்..!
அன்னையின் வளர்ப்பினில்
அன்பைக் கண்டு
தந்தையின் வளர்ப்பினில்
அகிலத்தைக் கண்டு
அறிவனாய் வாழ போராடுகின்றேன்
போரட்டம் மிகுந்த உலகத்தில்
போராட நீயும் வா என்று
என் தாயும் என்னை
பிறப்புவித்தாள்..!
அவளிச்சைப்படியே பிறந்தேனின்று..!
எங்கும் எதிலும் வென்று விட
போட்டி, பொறாமைகளை தகர்த்து விட
எனைப் பெற்ற எந்தன் பெற்றோர்களே
எனக்கு எல்லா வரங்களையும் அளித்தருளும்
உம் பாதங்களில் எனக்கும் இடமருளும்..!

மகிழ்ச்சி.........

கொடியின் இடையில் மலர்கள்
பூக்கும் போதுதான்
மனதில் மகிழ்ச்சி நிறையும்...
அவைகள் உதிரும் போது
என்மனதில் துன்பம் துண்டை விரிக்கும்..!
இதற்கு மாறாக
உன் இதழ்க்கொடியில்
புன்னகை பூ பூத்தாலும் சரி...
உதிர்ந்தாலும் சரி...
என் மனதில் மகிழ்ச்சி நிறையும்..!

சாரல் மழை............

கொளுத்தும் வெயிலில்
கோடை மழையின்
சாரல் மழை
சரம் சரமாக வழிய...
அம்மழைச்சரங்கள்
பூமித்தாயின் உடலெங்கும்
முத்த மழை பொழிய
அவளோ புளங்காகித்தில்
மூச்சு விட்டாள்..!
நம் நாசியில் அவள்
மண் மணம் பரவ
நம் அனைவரின் உடலெங்கும்
புத்துணர்ச்சி பரவும்...
நம் இதழ் நமையறியாமல்
புன்னகை பூக்கும்..!
கிராமத்து மண் மணத்தில்
கிறுகிறுத்துப் போகாதோர் யார்?
அவ்வாசனையை  எதிர்பார்த்தேன்
கிடைத்த்தென்னவோ
தார் சிமெண்டின் நாற்றமும்
நகரத்து குப்பைகளின் நாற்றமும்தான்..!

காதலின் கைதி......

உனைப் பார்த்துப் பேசியே
பலநாள் ஆகிறது
எனைக் காண 
எப்போது வருவாய்
என்றேன்..!
அவளோ...
'என் பெற்றோரிருக்கின்றனர்
என் உடன் பிறந்தோரிருக்கின்றனர்
உனை இப்போது காண வருவது
இயலாது கண்ணா...
நான் இங்கு கைதியாக இருக்கிறேன்
சூழ்நிலைக் கைதியாகவும்
இருக்கிறேன்' என்றாள்...
என்னை உன் காதலின் கைதியாக்கி விட்டு
நீயோ அங்கே கைதி என்கிறாய்...
இதற்கு நான் யார் மீது குற்றம் சொல்ல..?

அனுமதி ...

ரோஜாவிடம் அனுமதி கேட்டு
பனித்துளி அதன்மேல் படர்வதில்லை..!
நிலவிடம் அனுமதி கேட்டு
அல்லி மலர் அழகாய்ப் பூப்பதில்லை...
பூவிடம் அனுமதி கேட்டு
தேனை வண்டு குடிப்பதில்லை..!
அதே போலத்தான்
யாரிடமும் அனுமதி கேட்டு
வருவதில்லை காதல்..!
அன்பொழுகும் அழகைக் கண்டால்
ஆர்ப்பரித்து வந்து விடும் காதல்..!
உன் மேல் நான் கொண்டதைப் போல..!

உன்னைச் சுற்றியே..!

அன்பை திகட்டத் திகட்டப்
புகட்டி விட்டு...
அலைகடல் தாண்டி
அயல்நாடு சென்று விட்டாய்..!
ஆறு நாட்களுக்கொரு முறை
அலைபேசியில் அழைத்து
மறந்தாயா என் அன்பே..?
என்ற கேள்வியை என்னிடம்
மறவாமல் கேட்கிறாய்..!
உன்னை மறந்தால் தானே
நான் நினைப்பதற்கு..!
அன்னையை மறந்தேன் எனில்
அகிலத்தை மறந்தவனாவேன்..!
அய்யனை மறந்தேன் எனில்
அறிவை மறந்தவனாவேன்..!
உன்னை மறந்தேன் எனில்
உயிரையே மறந்தவனாவேன்..!
என்னுடல் கூடு மட்டும்தானிங்கே...
என்னுயிரும் உறவும் நினைவும்
எக்கணமும் உன்னைச் சுற்றியே..!

உள்ளத்தின் வலி.....

உள்ளத்தின் வலிகளை
உரியவளிடம் சொன்னால்...
வலியது மறையும்
என்றாய் பெண்ணே..!
என் உள்ளத்தின் வலியே
நீயென்றால் நான்
யாரிடம் போய்ச் சொல்ல..!

தவித்துப் போகிறேன்...! தனிமையில் சாகிறேன்..!

மலர்ந்த காம்பை விட்டு
மலர் சென்றால்...
தனித்தழும்
மலர்க் காம்பைப் போல...
அமாவாசையன்று
நிலவைக் காணாமல்
மலராத அல்லியைப் போல...
தன் இணையது
பிரிந்து விட்டால்
ஏதுமருந்தாமல்
தனித்திருக்கும்
அன்றில் பறவை போல...
உன் பிரிவால் நானுமிங்கே
தவித்துப் போகிறேன்...!
தனிமையில் சாகிறேன்..!
சீக்கிரம் வந்து விடு
என் தனிமையைக் கொன்று விடு..!

அவளின் நினைவுகள்.....

அவள் எனக்கு இல்லை என்று
உறுதியாக தெரிந்த பிறகும்,
உயிரோடு இருக்கிறேன் ........!
- அவளுக்காக அல்ல
அவளோடு வாழ்ந்த
அந்த நினைவுகளுக்காக ........!

உன் இஷ்டம்..............

பின்னொரு நாளில்,
அவள் என்னிடம்,கூறினால்
நான், உன் கால் தூசிக்கும் சமமாக மாட்டேன்,
எப்படியானாலும், நான் உன்னை,
என் தலைமீது தான் சுமக்கிறேன்,
தூசியாவதும், கிரீடமாவதும்,
உன் இஷ்டம்

என் உயிர் .....

என் தோளோடு தலைசாய்க்க
தோழியைபோல் தோள் கொடுக்க
நிஜத்தை உணரவைக்க
நிழலாய் கூடவர
என்னுயிராய் வந்தவள்
என் பிரியமான மனைவி
எத்தனை யுகம்தான்
தவம் இருந்தேன்
எத்தனை காலம்தான்
விழித்திருந்தேன்

ஆசை......9566520975

எனக்கு இரண்டே ஆசைகள்தான், ஒன்று
உன்னை காதலித்துக்கொண்டே இருப்பது, இரண்டு
உன்னை காதலித்துக்கொண்டே இறப்பது.........